/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீடின்றி ஊராட்சி நிர்வாகங்கள் தவிப்பு
/
15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீடின்றி ஊராட்சி நிர்வாகங்கள் தவிப்பு
15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீடின்றி ஊராட்சி நிர்வாகங்கள் தவிப்பு
15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீடின்றி ஊராட்சி நிர்வாகங்கள் தவிப்பு
ADDED : ஜூலை 09, 2025 07:16 AM
கம்பம், : ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகளுக்குரிய 15 வது நிதிக் குழு மானிய ஒதுக்கீடு அனுமதிக்காததால் -ஊராட்சி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.
ஊராட்சி நிர்வாகங்கள் மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் செயல்படுகிறது. மாநில நிதிக் குழு மானியம், 15 வது நிதிக் குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட நிதி மானியம் என பல வகை நிதி ஒதுக்கீடுகள் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊராட்சிகளுக்கு 15 வது நிதிக்குழு மானியம் வழங்குகிறது. ஊராட்சிகளின் பரப்பு, மக்கள் தொகைக்கு ஏற்ப ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகம், சமுதாய கழிப்பறை, சிமென்ட் ரோடு, குடிநீர் மேல்நிலை தொட்டி, கழிவு நீர் ஓடை கட்டுதல், பைப் லைன் பதித்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் செய்யப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இந்த நிதி ஒதுக்கீடுகள் செய்து பணிகள் துவக்கப்படும். ஆனால் இந்தாண்டு வளர்ச்சி பணிகளுக்கான மதிப்பீடுகள் தயார் செய்து மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆவணங்கள் ஊராட்சி நிர்வாகங்களால் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆவணங்கள் அனுப்பி 3 மாதங்களை கடந்தும் நிர்வாக அனுமதியும் தரவில்லை.
அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளும் அனுமதிக்கவில்லை. இதனால் ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் தேக்கமடைந்துள்ளது. மத்திய அரசு 15 வது நிதிக் குழு மானியத்தை ஊராட்சிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.