/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி இடத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு
/
ஊராட்சி இடத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு
ஊராட்சி இடத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு
ஊராட்சி இடத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : டிச 23, 2024 05:41 AM

தேவதானப்பட்டி: டி.வாடிப்பட்டி ஊராட்சியின் இடத்தில் 'பஞ்சமி' இடம் என குடியேறுவதற்கு குடிசை போட வந்தவர்களிடம், தாசில்தார் மருதுபாண்டி, 'இந்த இடம் ஊராட்சிக்கு உட்பட்டது' என, பேச்சு வார்த்தை நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு ஏக்கர் நிலம் தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு அருகே உள்ளது. இதில் சில்வார்பட்டி தெற்கு காலனி, தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் குடியேறுவதற்காக குடிசை அமைக்கும் பணியினை மேற்கொண்டனர். பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டி, டி.எஸ்.பி., நல்லு, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் அப்துல்ஹா, ஊராட்சித் தலைவர் தங்கராஜ், செயலர் வீரபுத்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிசை அமைக்க வந்தவர்கள், 'இந்த இடம் பஞ்சமி நிலம் என்பதால் எங்களுக்கு சொந்தமான இடம். இடம் சார்ந்த பத்திர பரிவர்த்தனைகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் பழைய பெயருக்கு (பஞ்சமி நிலமாக) பத்திரம் பதிய வேண்டும்.', எனவும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து எதிருப்பு தெரிவித்தனர். தாசில்தார் விசாரணையில், 'குறிப்பிட்ட இந்த இடம் சில ஆண்டுகளுக்கு முன் டி.வாடிப்பட்டி ஊராட்சிக்கு கவர்னர் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.' என, தெரியவந்தது. இருப்பிணும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். பின் வீட்டுமனை வேண்டுவோர் பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடனிடம் மனு கொடுத்து பயன் பெறலாம் என, தெரிவித்தார். இதனால் குடிசை அமைக்க வந்தவர்கள் கலைந்து சென்றனர்.

