/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கனிமவள நிதி பணிகளுக்கு ஒப்புதல் வழங்காத அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஊராட்சி தலைவர்

ADDED : நவ 24, 2024 06:32 AM
ஆண்டிபட்டி : கனிமவள நிதியில் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளை கண்டித்து சண்முகசுந்தரபும் ஊராட்சி சிறப்பு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் தற்போதைய நிர்வாகத்தினரின் கடைசி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ல் நடத்தப்பட இருந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் தேதி மாற்றத்திற்கு பின் நேற்று நடந்து முடிந்தது.
சண்முகசுந்தரபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் ரத்தினம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். கிராம ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கனிமவள நிதியில் தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் அதிகாரிகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திம்மரசநாயக்கனூர் ஊராட்சி சார்பில் டி. பொம்மிநாயர்கன்பட்டியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவி அக் ஷயா தலைமை வகித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பேசி கண்ணீர் மல்க கூட்டத்தில் இருந்து ஊராட்சி தலைவி விடை பெற்றார். 2025--2026ம் ஆண்டுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.1.10 கோடி மதிப்பிலான பணிகள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சார்பில் கடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவி வேல்மணி தலைமை வகித்தார். இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை, தரம் உயர்த்தப்படும் ஆண்டிபட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் பாண்டியன் ஊராட்சி நிர்வாகத்தில் மனு கொடுத்தார். இது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.