/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பண்ணைப்புரம் ஓடை தடுப்புச்சுவர் சீரமைக்காததால் விபத்து அபாயம்
/
பண்ணைப்புரம் ஓடை தடுப்புச்சுவர் சீரமைக்காததால் விபத்து அபாயம்
பண்ணைப்புரம் ஓடை தடுப்புச்சுவர் சீரமைக்காததால் விபத்து அபாயம்
பண்ணைப்புரம் ஓடை தடுப்புச்சுவர் சீரமைக்காததால் விபத்து அபாயம்
ADDED : நவ 15, 2025 04:48 AM
உத்தமபாளையம்: பண்ணைப்புரத்தில் மெயின்ரோட்டில் உள்ள ஓடை தடுப்பு சுவர் சேதமடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.
உத்தமபாளையத்தில் இருந்து போடி செல்லும் நெடுஞ்சாலையில் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் ஆகிய பேரூராட்சிகள் அமைத்துள்ளன. இதில் பண்ணைப்புரம் மட்டும் நெடுஞ்சாலையில் இருந்து மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. பொதுமக்கள் நெடுஞ்சாலையில் இருந்து வீடுகளுக்கு நடந்து செல்ல வேண்டும். பஸ்கள் ஊருக்குள் செல்லாது. பயணிகள் நெடுஞ்சாலையில் இறங்கி ஊருக்குள் செல்ல வேண்டும்.
இந்த ரோட்டில் வலதுபுறம் ஓடை வழியாக மழை காலங்களில் வெள்ளம் வெளியேறும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெள்ளத்தில் ஓடையின் தடுப்பு சுவர் சேதமடைந்தது. சேதமடைந்த தடுப்பு சுவர் இன்று வரை சீரமைக்காமல் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது.
இரவில் வரும் வாகனங்கள் இந்த ஓடைக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஊருக்குள் செல்ல பயன்படும் முக்கிய ரோட்டில் உள்ள ஓடைப் பாலத்தின் தடுப்பு சுவர் புதிதாக அமைக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.