/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பனியால் நுகர்வு குறைந்து பன்னீர் திராட்சை விலை சரிவு
/
பனியால் நுகர்வு குறைந்து பன்னீர் திராட்சை விலை சரிவு
பனியால் நுகர்வு குறைந்து பன்னீர் திராட்சை விலை சரிவு
பனியால் நுகர்வு குறைந்து பன்னீர் திராட்சை விலை சரிவு
ADDED : பிப் 07, 2024 12:33 AM
கம்பம் : பனி காரணமாக பன்னீர் திராட்சை நுகர்வு குறைந்து விலை சரிவாகி உள்ளது.
தேனி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் திராட்சை சாகுபடியாகிறது. பெரும்பாலும் பன்னீர் திராட்சையும், கணிசமான அளவில் விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது . திராட்சை சாகுபடியில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிராவில் ஆண்டிற்கு ஒரு அறுவடை மட்டுமே செய்கின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் ஆண்டிற்கு 3 முறை அறுவடை மேற்கொள்ளப்படுகிறது.
விலையை பொறுத்தவரை விதையில்லா திராட்சை வரத்து நவம்பர் முதல் மார்ச் வரை குறைவாக கிடைக்கும். அதன்பின் பன்னீர் திராட்சைக்கு விலை கிடைக்கும். தற்போது பன்னீர் திராட்சை கிலோ ரூ.10 முதல் 15 விலையில் கிடைக்கிறது. தரமான பழங்கள் மட்டுமே ரூ.20 முதல் 25 வரை கிடைக்கிறது. இந்த விலை குறைவிற்கு விவசாயிகள் இரு காரணங்களை கூறுகின்றனர்.
அதில் சமீபத்திய மழை காரணமாக பன்னீர் திராட்சை தரத்தில் குறைபாடு உள்ளதும்,பனி ஆரம்பமாகி இருப்பதால் பொதுமக்கள் நுகர்வு குறைவாக இருக்கிறது. இரண்டாவதாக மகாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா திராட்சை விலை குறைவாக கிடைப்பதால், மார்க்கெட்டில் பன்னீர் திராட்சையை தவிர்த்து பொதுமக்கள் விதையில்லா திராட்சையை வாங்குகின்றனர். இனி அடுத்த சீசனில் தான் விலை அதிகரிக்கும் என்கின்றனர்.

