/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'சர்வாதிகாரத்தின் உச்ச நிலை' பன்னீர்செல்வம் கருத்து
/
'சர்வாதிகாரத்தின் உச்ச நிலை' பன்னீர்செல்வம் கருத்து
'சர்வாதிகாரத்தின் உச்ச நிலை' பன்னீர்செல்வம் கருத்து
'சர்வாதிகாரத்தின் உச்ச நிலை' பன்னீர்செல்வம் கருத்து
ADDED : செப் 07, 2025 01:53 AM
போடி:முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் கூறியதாவது: அ.தி.மு.க., வின் மூத்த முன்னோடி, கட்சிக்காக பாடுபட்டவர் செங்கோட்டையன். நேற்று முன் தினம் அவர் அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்றார். வேறு குற்றச்சாட்டும் சொல்லவில்லை. இதற்கு இந்த தண்டனையா. அ.தி.மு.க., இணைய வேண்டும் என கூறியவர்கள் மீது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை.
கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளனர். செங்கோட்டையைனை கட்சி பொறுப்பில் நீக்கியது கொடுங்கோல் தண்டனை. பதவி பறிக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை. இதற்கு மக்கள் பாடம் புகட்டுவர். அ.தி.மு.க., வில் உள்ளவர்கள் பிரிந்ததில் இருந்து லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் தோல்விகளை கண்டு வருகிறது. தொடர் தோல்வி தேவைதானா என்பது தொண்டர்களின் கேள்வியாக உள்ளது. தோல்வியில் இருந்து விடுபட பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது ஒன்றரை கோடி தொண்டர்கள், மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.