ADDED : ஏப் 20, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயில் மலைமேல் அமைந்து உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா ஏப். 15ல் துவங்கி 22 வரை நடக்கிறது. தினம் தோறும் பரமசிவன், லட்சுமி நாராயணன், முருகன், வள்ளி, தெய்வானை, அனுமனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்து வருகிறது.
இதனையொட்டி நேற்று சிவனுக்கு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நாராயணி, கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன், செயலாளர் பேச்சிமுத்து உட்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

