/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர் கண்காணிப்பு அவசியம்
/
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர் கண்காணிப்பு அவசியம்
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர் கண்காணிப்பு அவசியம்
டூவீலர்களில் பறக்கும் சிறுவர்கள் பெற்றோர் கண்காணிப்பு அவசியம்
ADDED : ஏப் 20, 2025 04:48 AM
கூடலுார் : கோடை விடுமுறை நாட்களில் சிறுவர்கள் டூவீலர்களை அதிக வேகத்துடன் ஓட்டிச் செல்வது அதிகரித்துள்ளது. அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
பொதுத்தேர்வு முடிந்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் அதிகமான சிறுவர்கள் டூவீலர்களை ஓட்டுவதை முதன்மையாக கொண்டுள்ளனர்.
கூடலுாரில் இருந்து அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு டூவீலரில் மூன்று அல்லது நான்கு சிறுவர்கள் அதிக வேகத்துடன் ஒட்டிச் செல்கின்றனர்.
பெற்றோர்கள் இதை கண்டு கொள்வதில்லை. சிறுவர்கள் வாகன விபத்தை ஏற்படுத்தினால் பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக சிறுவர்கள் வாகன விபத்தில் சிக்கி வருகின்றனர்.
பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க முன்வர வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.