/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அட்மிஷன் துவங்குமா எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்
/
மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அட்மிஷன் துவங்குமா எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்
மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அட்மிஷன் துவங்குமா எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்
மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி அட்மிஷன் துவங்குமா எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்
ADDED : மே 27, 2025 01:28 AM
தேனி: மாவட்டத்தில் கேந்திர வித்யலயா பள்ளியில் இந்த கல்வியாண்டிலாவது வகுப்புகள் துவங்குமா என பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 2024 டிச.,ல் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அட்மிஷன் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரவித்யாலயா பள்ளி தேனி மாவட்டத்தில் இதுவரை துவக்கவில்லை.
இப்பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பொதுமக்களின் குழந்தைகளுக்கும் அட்மிஷன் வழங்கப்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பரில் தமிழகத்தில் தேனி, தஞ்சை உட்பட தேசிய அளவில் 85 பள்ளிகளை துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
தேனி மாவட்டத்தில் இப்பள்ளி துவங்க அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. அங்கு நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு, சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி அமைக்க இடத்தேர்வும் நடந்துள்ளது.
ஆனால், கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
அருகில் உள்ள திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் எப்போது துவங்கும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கல்வித்துறையினர் சிலர் கூறுகையில், 'கே.வி., பள்ளிகள் மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் பள்ளி திறப்புபற்றி ஏதும் தெரியவில்லை,' என்றனர்.
மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வகுப்புகள் செயல்பட பள்ளி கேட்டனர், அதற்கு பள்ளிகட்டடத்தை ஒதுக்கீடு செய்துள்ளோம். இடத்தேர்விற்கு ஆய்வும் நடந்துள்ளது.
ஆனால், அட்மிஷன் தொடர்பாக ஏதும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை', என்றார்.