sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

  சங்கேத வார்த்தைகளில் அலைபேசியில் 'சாட்டிங்' பெற்றோர்களே உஷார்: இரவில் துாங்காததால் மாணவர்கள் உடல் நலம் பாதிப்பு

/

  சங்கேத வார்த்தைகளில் அலைபேசியில் 'சாட்டிங்' பெற்றோர்களே உஷார்: இரவில் துாங்காததால் மாணவர்கள் உடல் நலம் பாதிப்பு

  சங்கேத வார்த்தைகளில் அலைபேசியில் 'சாட்டிங்' பெற்றோர்களே உஷார்: இரவில் துாங்காததால் மாணவர்கள் உடல் நலம் பாதிப்பு

  சங்கேத வார்த்தைகளில் அலைபேசியில் 'சாட்டிங்' பெற்றோர்களே உஷார்: இரவில் துாங்காததால் மாணவர்கள் உடல் நலம் பாதிப்பு


ADDED : நவ 19, 2024 05:57 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பள்ளி மாணவ, மாணவிகள் ‛நியுமெரிக்கல் வேர்ட்ஸ்' மூலம் நண்பர்களுடன் அலைபேசியில் நீண்ட நேரம் சாட்டிங் செய்வதால் பலரின் உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சங்கேத வார்த்தைகளை பயன்படுத்துவோரை கண்டறிந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர் கோரியுள்ளனர்.

மாவட்டத்தில் அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இருபாலின மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். இவர்கள் பாடம் சம்மந்தமான தரவுகளை பதிவிறக்கம் செய்ய ‛ஸ்மார்ட் போன்' பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பெற்றோர்களும் கல்வி உபகரணமாக கருதி ஸ்மார்ட் போன், டேப்லெட் வாங்கி தருகின்றனர்.

நியுமெரிக்கல் கோட் வேர்ட்ஸ்:

அலை பேசி பயன்படுத்தும் சிலர் 1 முதல் 26 வரை உள்ள எண்களை வரிசைப்படுத்தி அதனை ஆங்கில எழுத்துக்களுடன் இணைத்து வார்த்தைகளை சங்கேத மொழிகளாக மாற்றி பயன்படுத்துகின்றனர். வார்த்தைகளில் எழுத்துக்கு பதிலாக எண்களை பயன்படுத்துகின்றனர். இதனை 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சங்கேத வார்த்தைகளை மாணவர்கள் சிலர் பரவலாக மாணவிகளிடமும் பழக்கப்படுத்தி உள்ளனர். இதன் மூலம் எதிர்பாலின மாணவ, மாணவிகள் பெற்றோர் அறியமுடியாத வகையில் இரவிலும், அதிகாலையிலும் உரையாடலை தொடர்கின்றனர். அதிகாலை 2:30 மணி முதல் 5:00 மணி வரை ‛போர்வைக்குள் மின்மினி பூச்சிகளாய்' உரையாடல் வளர்க்கின்றனர். இதனால் காலையில் பள்ளி செல்ல எழுந்திருக்க முடியாமல் சிரமம் அடைவதுடன் உடல், மனநிலை பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனை தாமதமாக கண்டறிந்த பெற்றோர் உளவுத்துறை போலீசாரின் உதவியை நாடி விழிப்புணர்வு ஏற்படுத்த கோரியுள்ளனர்.

பாக்ஸ்பெற்றோர் கண்காணிப்பு அவசியம்

சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: இவ்விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக பிள்ளைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். குறிப்பாக இணையத்தளம், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மாணவ, மாணவிகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். இதற்காக 'கூகுள்' தளத்தில் Parental control safety tools உள்ளன. மேலும் கூடுதலாக நிறைய அப்ளிகேஷன்ஸ் உண்டு. இதனை அலைபேசியில் பதிவேற்றம் செய்து கண்காணிக்க வேண்டும்., என்றார்.






      Dinamalar
      Follow us