/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் திருடு போகும் பூங்கா உபகரணங்கள்
/
தேனியில் திருடு போகும் பூங்கா உபகரணங்கள்
ADDED : ஆக 17, 2025 12:21 AM

தேனி; தேனி அல்லிநகரம் நகராட்சி சமதர்மபுரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் காமராஜர் பூங்கா பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு நடைபயிற்சி தளம், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், வாலிபால் மைதானம், இது தவிர சிறிய மைதானம் உள்ளது.
இங்கு தினமும் காலை, மாலையில் 50க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இது தவிர பள்ளி மாணவர்கள் பலர் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இந்த பூங்காவை பயன் படுத்துகின்றனர்.
ஆனால் இந்த மை தானத்தின் வடக்குப் பகுதி கதவு, சிறுவர்கள் விளையாடும் உபகரணம் ஊஞ்சல் சேதம் அடைந்து விட்டது. உடைந்து கீழே விழுந்துள்ள இரும்பு கதவு திருடு போகும் அபாயமும் உள்ளது.
சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க வேண்டும். இரவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தவிர பெண்கள் பலர் நடை பயிற்சி மேற்கொள்ள அதிகளவில் வருகின்றனர்.
இவர்களுக்கு சுகாதார வளாகம் அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந் துள்ளது.