/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பள்ளி மாணவிகள் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு சாதனை
/
அரசு பள்ளி மாணவிகள் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு சாதனை
அரசு பள்ளி மாணவிகள் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு சாதனை
அரசு பள்ளி மாணவிகள் இரண்டு புத்தகங்களை வெளியிட்டு சாதனை
ADDED : ஆக 17, 2025 12:21 AM

சின்னமனூர்; சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் இருவர் இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளனர்.
சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி அனுஷ்கா 'வெல்லும் சொல்' என்ற தலைப்பில் 100 பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுதியுள்ளார்.
மாணவர்களை ஊக்கப்படுத்தவும், தேர்விற்கு தயார் செய்வது எப்படி, கல்வி கற்பதற்கு தேவையான தகவல்களை புத்தகத்தில் டிப்ஸ்களாகவும், மாணவர்களை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை குறிப்பிட்டுள் ளார்.
இதே பள்ளியில் அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவி ஜமுனா 'நல்ல கேள்வி நல்ல பதில்' என்ற தலைப்பில் 100 பக்கங்களை கொண்ட புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு எப்படி தயாராவது என்பதற்கு தேவையான ஆயிரம் கேள்விகளும், அதற்கான பதில்களும் இடம் பெற்றுள்ளன.
இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா சுதந்திர தினத்தன்று பள்ளியில் நடந்தது. தலைமையாசிரியை உமா தலைமை வகித்தார்.
புத்தகங்களை எழுதுவதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை சங்கீதா முன்னிலை வகித்தார்.
இரண்டு புத்தகங் களின் முதல் பிரதியை வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா வெளியிட, முதல் பிரதிகளை சீப்பாலக்கோட்டை கிராம தலைவர் வேலுச்சாமி பெற்றுக் கொண்டார்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பதிப்பக உரிமையாளர் சுபாஷ் சந்திரபோஸ், சிறப்பு எஸ்.ஐ. கோகுலகண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.