/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடமாறுதல் கலந்தாய்வு ஏமாற்றம் பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்
/
இடமாறுதல் கலந்தாய்வு ஏமாற்றம் பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்
இடமாறுதல் கலந்தாய்வு ஏமாற்றம் பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்
இடமாறுதல் கலந்தாய்வு ஏமாற்றம் பகுதிநேர ஆசிரியர்கள் புலம்பல்
ADDED : டிச 31, 2024 06:38 AM

தேனி: பகுதிநேர ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஏமாற்றம் அளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் விஜயராகவன், ஜெகன் உள்ளிட்டோர் கூறியதாவது: மாவட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களாக 218 பேர் பணிபுரிகிறோம். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்தல் என்ற வாக்குறுதியை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தினோம்.
தொடர்ந்து இதில் பணியிட மாறுதல் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டது. பணியிட மாறுதல் கேட்டு 75 பேர் விண்ணப்பித்தோம். ஆனால் கவுன்சிலிங்கில் நாங்கள் கேட்ட பகுதிகளில் காலிப்பணியிடம் இல்லை ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.