ADDED : நவ 02, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: கர்நாடக மாநிலம், கோலார் பகுதியைச் சேர்ந்தவர்கள் நிதின் 21, சுகாஷ் 23. இவர்கள் டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். நேற்று மாட்டுபட்டி அணைக்கு சென்று விட்டு மதியம் மூணாறை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
மாட்டுபட்டியில் தனியார் பள்ளி அருகே வந்தபோது ரோட்டோரம் மண் திட்டின் மீது நின்று கொண்டிருந்த காட்டு மாடு திடிரென ரோட்டின் குறுக்கே பாய்ந்தது. அப்போது டூவீலர் மீது காட்டுமாடு மோதியதால் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியில் வந்தவர்கள் இருவரையும் மீட்டு மூணாறில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

