/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் நாய் கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாதிப்பு ; நிதி ஒதுக்கீடு இன்றி கருத்தடை செய்ய முடியாமல் தவிப்பு
/
மாவட்டத்தில் நாய் கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாதிப்பு ; நிதி ஒதுக்கீடு இன்றி கருத்தடை செய்ய முடியாமல் தவிப்பு
மாவட்டத்தில் நாய் கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாதிப்பு ; நிதி ஒதுக்கீடு இன்றி கருத்தடை செய்ய முடியாமல் தவிப்பு
மாவட்டத்தில் நாய் கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாதிப்பு ; நிதி ஒதுக்கீடு இன்றி கருத்தடை செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : நவ 02, 2025 05:57 AM

போடி : தேனி மாவட்டத்தில் நாய் கடியால் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பாதிப்பிற்குள்ளாகின்றனர். நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த 4 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு இல்லாததால் கருத்தடை செய்ய முடியாமல் உள்ளாட்சிகள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றன.
மாவட்டத்தில் கால்நடைத்துறை 2022 ன் கணக்கின்படி 25 ஆயிரம் தெரு நாய்களும், 15 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் உள்ளன. தெருக்கள், பஸ்ஸ்டாண்ட்டுகளில் தெரு நாய்கள் சுற்றி திரிந்து நடந்தும், டூவீலரில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் விபத்துகளும், உயிர் பலியாகின்றன.
போடி நகர், கிராமங்களில் இருந்து நாய் கடியால் மாதம் 140 முதல் 170 பேர் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். ஆண்டுக்கு 1750 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் பெரியகுளம், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர் அந்த மாதத்திற்குள் ஏ.ஆர் வி., எனும் ஐந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் இலவசமாக ஊசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ. 2500 செலவு செய்ய வேண்டும்.
ஒரு நாய்க்கு ரூ.1400செலவு:
தெரு நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன், சிகிச்சைக்கு பின் பாதுகாத்தல், வெறிநோய் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாய்களுக்கு கருத்தடை செய்திட விலங்குகள் நலவாரியம் 50 சதவீதம், உள்ளாட்சி நிர்வாகம் 50 சதவீதம் என ஒரு நாய்க்கு ரூ.1400 செலவிடும் வகையில் ரூ. பல லட்சம் நிதி உதவி செய்யப்பட்டன.
கடந்த 4ஆண்டுகளாக கருத்தடை செய்வதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை. உள்ளாட்சிகளில் போதிய நிதி இல்லாததால் நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியாமல நிர்வாகங்கள் தவிக்கின்றன.சில நகராட்சி பொது நிதியின் நிதி நிலையை பொறுத்து கருத்தடை செய்கின்றன. இதனால் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. நாய்களின் எண்ணிக்கையும், நாய்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கட்டுப்படுத்த வலியுறுத்தல்:
போடி அரசு மருத்துவமனை டாக்டர் கூறுகையில்: நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்கு ஏ.ஆர்.வி., ஊசியும் வெறி நாய் கடித்தவர்களுக்கு ரேபிஸ் இமினோ குலோபிலின் ஊசி செலுத்த்படுகிறது. ஜன. 2025 முதல் அக்., 2025 வரை 1500 பேர் நாய் கடியால் சிகிச்சை பெற்று உள்ளனர். இது போல மாவட்டத்தில் பாதிப்பு அதிகம் உள்ளது என்றனர்.
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்து உயிர் பலி ஆவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

