/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் குவிந்த பயணிகள்
/
பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் குவிந்த பயணிகள்
ADDED : ஆக 18, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தொடர் விடுமுறை முடிந்து பணிபுரியும் ஊர்களுக்கு செல்ல பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் குவிந்தனர்.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகர் பகுதியில் பணிபுரிபவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பினர். விடுமுறை முடிந்து இன்று வேலை நாள் துவங்குகிறது. இதனால் தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் நேற்று மதியம் முதல் பயணிகள் குவிந்தனர். அதே போல் போடியில் இருந்து மாலையில் மதுரை புறப்பட்ட பயணிகள் ரயில், இரவு சென்னை புறப்பட்ட சூப்பர் பாஸ்ட் ரயிலிலும் பயணிகள் அதிக அளவில் பயணித்தனர்.