/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருப்பூர், கோவை செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் மறியல்
/
திருப்பூர், கோவை செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் மறியல்
திருப்பூர், கோவை செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் மறியல்
திருப்பூர், கோவை செல்ல பஸ்கள் இல்லாததால் பயணிகள் மறியல்
ADDED : ஜன 22, 2024 05:54 AM
தேனி: தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து கோவை, திருப்பூருக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கியதால் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பின், பயணிகள் கலைந்து சென்றனர்.
பொங்கல் விடுமுறை முடிந்ததும், முகூர்த்த நாள் என்பதாலும் நேற்று மாலை தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் 3 வது பிளாட்பாரத்தில் கோவை, திருப்பூர் செல்ல ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால், போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் சில பயணிகள் பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழை வாயிலில் மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். பின்னர் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் புறப்பட்டனர். பயணிகள் பலர் பஸ் ஸ்டாண்டு பிளாட்பாரங்களில் பஸ்கள் நின்றாலும், இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பஸ்கள் நுழையும் பகுதியில் இடையூராக நின்றனர். இதனால் பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.