/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் நிழற்கூரைகளை அகற்றியதால் பயணிகள் சிரமம் அரைகுறையாக கைவிடப்பட்ட பணி
/
பெரியகுளத்தில் நிழற்கூரைகளை அகற்றியதால் பயணிகள் சிரமம் அரைகுறையாக கைவிடப்பட்ட பணி
பெரியகுளத்தில் நிழற்கூரைகளை அகற்றியதால் பயணிகள் சிரமம் அரைகுறையாக கைவிடப்பட்ட பணி
பெரியகுளத்தில் நிழற்கூரைகளை அகற்றியதால் பயணிகள் சிரமம் அரைகுறையாக கைவிடப்பட்ட பணி
ADDED : ஜன 05, 2025 06:47 AM

--பெரியகுளம்: பெரியகுளம் மூன்றாந்தலில் இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக இருந்த பயணிகள் நிழற்கூரை இடித்து அகற்றிய பின் புதிய நிழற்கூரை அமைக்கும் பணி அரைகுறையாக கைவிடப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சி தென்கரையில் திண்டுக்கல்- குமுளி மாநில நெடுஞ் சாலை மூன்றாந்தல் பகுதியில் ஒரு ஆண்டுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றினர். அப்போது தேனி மார்க்கமாக செல்லும் பயணிகளுக்காக பஸ் ஸ்டாப்பில் இருந்த பயணிகள் நிழற்கூரையும், எதிர்ப்புறம் வத்தலக்குண்டு மார்க்கமாக செல்லும் பயணிகளுக்காக ஸ்டாப்பில் இருந்த நிழற்கூரைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர். இவை முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டவை. இடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நகராட்சி தலைவர்உறுதியளித்துஓராண்டுக்கு மேலாகியும் இங்கு நிழற்கூரை அமைக்க வில்லை. இதனால் பயணிகள் ரோட்டின் ஓரங்களில் நின்று அவதிப்படுவது தொடர்கிறது.3 மாதங்களுக்கு முன் பெரியகுளம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு ஆரம்பகட்ட நிதி ரூ.2.16 லட்சம் மதிப்பில் தேனி ரோட்டில் சிறிய அளவில் தகர செட் அமைக்கும் பணி நடந்தது. பொது மக்கள் கான்கீரிட் நிழற்கூரை இடித்து விட்டு தகர செட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் பணி அரைகுறையாக நிறுத்தப்பட்டது. மழை,வெயிலில் தினமும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
நகராட்சியின் தலைவர் கூறியதாவது: இரு புறங்களிலும் நிழற்கூரை அமைக்க இடம் ஒதுக்கி தர நெடுஞ்சாலை துறையிடம் கோரியுள்ளோம். எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. திருத்தி அமைக்கப்பட்டு ரூ.10 லட்சம் கேட்டுள்ளோம். இதே போல் திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் பஸ் ஸ்டாப்பிற்கு, தொகுதி எம்.பி.,நிதி கோரியுள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணி துவங்கும்.', என்றார்.