தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ டிக்கெட் இயந்திரம் பழுதால் பயணிகள் அவதி

டிக்கெட் இயந்திரம் பழுதால் பயணிகள் அவதி

டிக்கெட் இயந்திரம் பழுதால் பயணிகள் அவதி


UPDATED : செப் 01, 2026 08:15 PM

ADDED : செப் 01, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2026 08:15 PM ADDED : செப் 01, 2026 08:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து கம்பத்திற்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. அப்போது பஸ் ஸ்டாண்டில் இருந்து 50 மீட்டர் செல்வதற்குள், பஸ்சை நிறுத்திவிட்டு கண்டக்டர், டிரைவர் இருவரும் இறங்கி சென்றார். 10 நிமிடங்கள் ஆன நிலையில் பயணிகள் இறங்கி வேறு பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

சிலர் அதே பஸ்சில் டிரைவர், கண்டக்டருக்கு காத்திருந்தனர். 15 நிமிடங்கள் கழித்து இருவரும் வந்த நிலையில் பஸ் புறப்பட்டு சென்றது. இதுபற்றி தேவாரம் பணிமனை அதிகாரிகள் கூறுகையில், 'கண்டக்டரிடம் இருந்த டிக்கெட் வழங்கும் இயந்திரம் திடீரென பழுதானதால் அதை சரிசெய்ய தேனி புது பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு போக்குவரத்து ஊழியரிடம் கொண்டு சென்றார். அவர் வர தாமதம் ஆனதால் டிரைவரும் தேடி சென்றார். பழுது சரிசெய்யப்பட்டு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us