/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடி பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பயணிகள் தவிப்பு
/
போடி பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பயணிகள் தவிப்பு
போடி பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பயணிகள் தவிப்பு
போடி பஸ்ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பயணிகள் தவிப்பு
ADDED : ஏப் 22, 2025 06:42 AM

போடி: போடி பஸ் ஸ்டாண்டில் நிழற்குடை வசதி இன்றி பஸ்சிற்காக பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து சிரமம் அடைந்து வருகின்றனர்.
தமிழக, கேரள பகுதிகளை இணைக்கும் வழித் தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் அமைந்து உள்ளது.
கேரளா, போடியை சுற்றி உள்ள மக்கள் வெளியூர் செல்வதற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தினமும் போடி பஸ்ஸ்டாண்டில் இருந்து கிராம மார்க்கமாக 23 பஸ்களும், தேனி மார்க்கமாக 46 பஸ்களும் செல்கின்றன.
வெயில், மழையின் தாக்கத்தில் இருந்து பயணிகள் தங்களை பாதுகாத்து கொள்ள 13 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்ஸ்டாண்டில் இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப் பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் நிழற்குடை முழுதுவம் சேதம் அடைந்து உள்ளது.
தற்போது குடிப் பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளதால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் பஸ்களின் வருகைக்காக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்து சிரமம் அடைந்து வருகின்றனர். பயணிகள் நிழற்குடை வசதி அமைத்திட போடி நகராட்சி, போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.