/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பணியாளரை அவதுாறாக பேசிய நோயாளி கைது
/
பணியாளரை அவதுாறாக பேசிய நோயாளி கைது
ADDED : மார் 22, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை சித்தீஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த அருண்குமார் மனைவி சுகன்யாதேவி 30. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பையை கொட்ட சென்றார். அங்கே உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெரியகுளம் இ.புதுக்கோட்டை ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்த ஆனந்தராஜ் 35.
சுகன்யாதேவியை பின் தொடர்ந்தார். இதற்கு சுகன்யாதேவி எதற்கு வருகிறீர்கள் என கேட்டுள்ளார். அவரை அவதூறாக ஆனந்தராஜ் பேசியுள்ளார். தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், ஆனந்தராஜை கைது செய்தார்.