ADDED : ஏப் 16, 2025 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கூழையனுார் மேற்குத் தெரு மதியழகன் 56. சர்க்கரை நோய் பாதிப்பிற்கு 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் பாதிப்பு அதிகரித்த நிலையில் காலில் உள்ள விரலை அகற்றினர்.
இதனை நினைத்து மன விரக்தியில் புலம்பி வந்துள்ளார். இதனால் தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டார். இதையறிந்த மனைவி அமுதா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மதியழகன் உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

