ADDED : மார் 01, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ., நகரில் ரூ.19.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் பதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் வேல்மணி கூறியதாவது:
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஜெ.ஜெ., நகரில் மதுரை மெயின் ரோட்டில் இருந்து சோமசுந்தரம் வீடுவரை இப்பணி நிறைவடைந்துள்ளது.
ஊராட்சியின் நிதி நிலைமைக்கு ஏற்ப அடுத்தடுத்த பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

