/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் அனுமதியின்றி இடிப்பு தேனி கலெக்டரிடம் பி.டி.ஓ., புகார்
/
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் அனுமதியின்றி இடிப்பு தேனி கலெக்டரிடம் பி.டி.ஓ., புகார்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் அனுமதியின்றி இடிப்பு தேனி கலெக்டரிடம் பி.டி.ஓ., புகார்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் அனுமதியின்றி இடிப்பு தேனி கலெக்டரிடம் பி.டி.ஓ., புகார்
ADDED : ஜன 09, 2025 10:32 PM

கம்பம்:தேனி மாவட்டம், கம்பம் அருகே காயமக்கவுண்டன்பட்டியில் பயன்பாடின்றி இருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டது குறித்து பி.டி.ஓ., கனி, கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதால் பழைய கட்டடம் பயன் இன்றி பூட்டி வைக்கப்பட்டிருந்தது.
இக்கட்டடம் ஒட்டு சாவடியாக பயன்படும். இந்த வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. பள்ளி கட்டடத்தை இடித்து விட்டு அங்கு காய்கறி சந்தை அமைக்க காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி , முடிவு செய்தது. இதற்கென அனுமதி கோரி கம்பம் ஒன்றிய நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் ஒன்றிய நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்த 3 கட்டடங்களை -மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடந்தது. அதிலிருந்த இரும்பு கம்பிகள், மரக்கட்டைகள், தளவாட பொருட்களும் எடுத்து செல்லப்பட்டன.
தகவல் அறிந்த கம்பம் பி.டி.ஓ. கனி நேற்று சம்பவ இடத்திற்கு சென்று கட்டடம் இடிக்கப்படுவதை தடுத்து கலெக்டரிடம் புகார் கூறியுள்ளார்.
பேரூராட்சி செயல் அலுவலர் பஷீர் கூறுகையில், 'டிசம்பரில் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் கட்டடத்தை இடிக்க அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கட்டடம் இடிக்க டெண்டர் எதுவும் விடவில்லை. கட்டடத்தை இடித்தது எனக்கு தெரியாது. தலைவர் அனுமதியில் நடந்திருக்கலாம்,' என்றார்.
பேரூராட்சி தலைவர் வேல்முருகன், '30 ஆண்டுகளாக பயனின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த கட்டடம் இருந்தது. இந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து இடித்துள்ளோம். ஒன்றிய அலுவலகத்திற்கு ஒராண்டிற்கு முன்பே கடிதம் கொடுத்துள்ளோம்,' என்றார்.
பி.டி.ஓ., கனியிடம் கேட்டதற்கு, 'கலெக்டர் அலுவலகத்தில் உள்ளேன். பின்னர் பேசுகிறேன் என்றார்.
ஒன்றிய அலுவலகத்தில் விசாரித்த போது, இடிக்கப்பட்ட கட்டடத்தை பொறியாளர் மூலம் மதிப்பீடு செய்து பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.