/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மயில்கள் குடியிருப்பு வரை வந்து செல்வதால் மகிழ்ச்சி
/
மயில்கள் குடியிருப்பு வரை வந்து செல்வதால் மகிழ்ச்சி
மயில்கள் குடியிருப்பு வரை வந்து செல்வதால் மகிழ்ச்சி
மயில்கள் குடியிருப்பு வரை வந்து செல்வதால் மகிழ்ச்சி
ADDED : அக் 08, 2024 04:23 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே மயில்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரைக்காக விளை நிலங்கள், கிராமத்தின் ஒதுக்குப்புறமாக குடியிருப்புகள் வரை வந்து செல்லும் மயில்களை தொந்தரவு செய்யாமல் பலரும் ரசிக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள கணவாய் மலை, புள்ளிமான்கோம்பை, டி.சுப்புலாபுரம், ஏத்தக்கோவில், நக்கலக்கரடு மலை, மறவபட்டி, அனுப்பபட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒதுக்குப்புறமான பகுதிகளில் மயில்கள் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமக்கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மயில்களுக்கு சுண்டல், பொரி, கடலை ஆகியவற்றை உணவாக வைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மலை மற்றும் வனப்பகுதியில் இருந்து காலை, மாலையில் இரைக்காக விளைநிலங்களுக்கும் ஒதுக்குப்புறமாக உள்ள குடியிருப்புகளுக்கும் மயில்கள் வந்து செல்கின்றன. ஆட்களைக் கண்டதும் பறந்து சில வினாடிகளில் அப்பகுதியில் இருந்து மறைந்து விடுகிறது. மயில்களை பார்க்க நினைப்பவர்கள் மறைந்திருந்து ரசிக்கின்றனர். காலை, மாலையில் மயில்கள் எழுப்பும் ஓசை ரசிக்குப்படியாக இருப்பதாகவும், அவற்றை யாரும் தொந்தரவு செய்வதில்லை என இப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மயில்கள் நடமாட்டம் குறித்து வனத்துறையும் தொடர்ந்து கண்காணிக்கிறது.