/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி நடந்து சென்றவர் பலி
/
தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி நடந்து சென்றவர் பலி
ADDED : ஏப் 04, 2025 05:31 AM

மூணாறு: பீர்மேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கேரள அரசு விரைவு பஸ் மோதி நடந்து சென்றவர் இறந்தார்.
இடுக்கி மாவட்டம் குமுளியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் சென்றது.
கொட்டாரக்கரா, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே பம்பனாறு பகுதியில் பஸ் சென்றபோது திடிரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அப்போது அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பாம்பனாறு பகுதியைச் சேர்ந்த தன்ஷிலாஸ் 68, பஸ் வேகமாக வருவதை பார்த்து ஒதுங்க முயன்றார்.
எனினும் அவர் மீது மோதிய பஸ் ரோட்டோரம் நிறுத்தி இருந்த மினி லாரி மீது மோதி நின்றது. விபத்தில் பலத்த காயம் அடைந்த தன்ஷிலாஸை பாலாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மினிலாரியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கொட்டாரக்கரா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்மேடு அருகே பாம்பனாறு பகுதியில் மினி லாரி மீது மோதி நின்ற கேரள அரசு விரைவு பஸ்.

