/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி
/
நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி
ADDED : ஏப் 18, 2025 06:50 AM
போடி: போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் 42. கூலித் தொழிலாளி.
இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரும் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர்.
பின் பக்கமாக அதிவேகமாக கார் முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதி டூவீலரை சேதப்படுத்தியது. பின் நடந்து சென்ற இளங்கோவன், கதிரேசன் மீதும் மோதியதில் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் போடி அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இளங்கோவன் இறந்தார்.
போடி தாலுாகா போலீசார் கம்பத்தை சேர்ந்த கார் டிரைவர் அபுதாகீர் 48. என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ரோடு மறியல்
விபத்தில் இறந்த இளங்கோவனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி போடி தேவாரம் செல்லும் ராசிங்காபுரம் மெயின் ரோட்டில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போடி டி.எஸ்.பி., சுனில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சம்பந்தப்பட்ட நபர்களிடம் உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். ரோடு மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.