/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 'பெனால்டிக் ஷூட் அவுட்' போட்டி
/
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 'பெனால்டிக் ஷூட் அவுட்' போட்டி
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 'பெனால்டிக் ஷூட் அவுட்' போட்டி
சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 'பெனால்டிக் ஷூட் அவுட்' போட்டி
ADDED : ஆக 04, 2025 04:44 AM

மூணாறு:மூணாறில் 'கிரீன்ஸ்' அமைப்பு சார்பில் 'பெனால்டி ஷூட் அவுட்' கால்பந்து போட்டி நடந்தது.
இந்த அமைப்பின் சார்பில் மழை கால சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் 'ரெயின் 40' என்ற பெயரில் ' பெனால்டி ஷூட் அவுட்' கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று மூன்றாம் ஆண்டாக போட்டிகள் நடந்தன. பழைய மூணாறில் உள்ள உயர்தர விளையாட்டு பயிற்சி மையத்தின் மைதானத்தில் நடந்த போட்டிகளை உடும்பன்சோலை எம்.எல்.ஏ., மணி தொடங்கி வைத்தார். 32 அணிகள் மோதின. அதில் மூணாறு நெல்சன் பாய்ஸ் அணி வெற்றி பெற்றது. கொச்சி பீச் கால்பந்து அணி 2ம் இடத்தையும், மூணாறைச் சேர்ந்த ஒர்ஷாப் ரெக்ரேஷன் கிளப் அணி 3ம் இடத்தையும் பெற்றன. தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா, மூணாறு டி.எஸ்.பி., அலெக்ஸ்பேபி, கே.டி.எச்.பி. கம்பெனி துணைத் தலைவர் கரியப்பா ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பணம், கேடயம் ஆகியவற்றை வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ., மணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா, 'கிரீன்ஸ்' அமைப்பின் தலைவர் மஜித், செயலாளர் சோஜன், பொருளாளர் பிஜூமாத்யூ, முன்னாள் தலைவர்கள் சாஜூஅலக்கப்பள்ளி, ஆன்ட்ரூஸ், கன்வீனர் லிஜிஐசக், ஏற்பாட்டு குழுவின் தலைவர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.