/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல்வர் கோப்பை போட்டிகள் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு
/
முதல்வர் கோப்பை போட்டிகள் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு
முதல்வர் கோப்பை போட்டிகள் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு
முதல்வர் கோப்பை போட்டிகள் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு
ADDED : ஆக 04, 2025 04:44 AM
தேனி: ''மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடக்கிறது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள் என 5 பிரிவுகளில் குழு, தனி நபர் போட்டிகள் நடக்கிறது. போட்டிகள் பற்றி மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் கூறுகையில், ''மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் www.cmtrophy.sdat.in என்ற இணையதளத்தில் ஆக.16க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 95140 00777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.