/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'பெனால்டி ஷூட் அவுட்' போட்டி: ஆக.3ல் நடக்கிறது
/
'பெனால்டி ஷூட் அவுட்' போட்டி: ஆக.3ல் நடக்கிறது
ADDED : ஜூலை 05, 2025 12:22 AM
மூணாறு; மூணாறில் ' கிரீன்ஸ்' அமைப்பு சார்பில் ' பெனால்டி ஷூட் அவுட்' கால்பந்தாட்ட போட்டி ஆக.3ல் நடக்கிறது.
அந்த சமூக அமைப்பு சார்பில் மழை கால சுற்றுலாவை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் வகையில் 'ரெயின் 40' என்ற பெயரில் ' பெனால்டி ஷூட் அவுட்' கால்பந்தாட்ட போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ஆக. 3ல் போட்டிகள் நடக்கின்றன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்க பணம், கோப்பை வழங்கப்படும்.
வெளியீடு: போட்டிக்கான ' லோகோ' வை மூணாறு ஊராட்சி தலைவர் மணிமொழி வெளியிட்டார். துணை தலைவர் மார்ஸ் பீட்டர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பவ்யா, கிரீன்ஸ் அமைப்பின் தலைவர் மஜீத், செயலாளர் சோஜன், பொருளாளர் பிஜூமாத்யூ, முன்னாள் தலைவர்கள் சாஜூஅலக்கப்பள்ளி, ஆன்ட்ரூஸ், கன்வீனர் லிஜிஐசக், ஏற்பாட்டு குழு தலைவர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.