/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாட்டம்
/
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாட்டம்
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாட்டம்
பென்னிகுவிக் பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 11:24 PM
போடி : முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு போடி அருகே பாலார்பட்டியில் பெண்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபட்டனர்.
இந்த அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுவிக்கை தேனி மாவட்ட மக்கள் மனித கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் மற்றும் அவரது குழந்தைகள் பெயரையே சூட்டி வருகின்றனர். தங்களது வாழ்நாள் முழுவதும் நன்றி கடனை செலுத்தி விழா கொண்டாடி வருகின்றனர். பென்னிகுவிக் 1841ல் ஜன.,15ல் பிறந்தார். இவரது பிறந்த நாளும், பொங்கலும் அடுத்தடுத்து வருவது என்பது பெருமைப்படக் கூடிய விஷயமாக கருதுகின்றனர். போடி அருகே பாலர்பட்டி கிராம மக்கள் தைத்திருநாள் பொங்கல் விழாவை பென்னிகுவிக்கிற்கு நினைவு பொங்கல் விழாவாக, அவரை வழிபடுவதை ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.நேற்று கர்னல் பென்னிகுவிக் எழுச்சி பேரவை தலைவர் ஆண்டி தலைமையில் தேவர் ஆட்டம், சிலம்பாட்டத்துடன், பெண்கள் பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக பென்னிகுவிக் நினைவு மண்டபத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். தேங்காய் உடைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், போடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன், தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ், 18 ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ், முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கிராமத்தைச் சேர்ந்த கர்னல் பென்னிகுவிக் எழுச்சி பேரவை தலைவர் ஓ.ஆண்டி கூறியதாவது : ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கக் கூடிய முல்லைப் பெரியாறு அணையை பல சோதனைகளை கடந்து பென்னிகுவிக் கட்டினார். இந்த அணை இல்லாவிட்டால் இந்த பகுதி மட்டுமின்றி 5 மாவட்டங்களும் ஆண்டு முழுவதும் வறட்சியாக இருந்திருக்கும். அவரது பிறந்த நாளான தை திருநாளில் நாங்கள் வணங்கும் மனித கடவுளாக போற்றி அவரது படத்திற்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபடுகின்றோம்.', என்றார்.