/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இறந்ததாக கூறி உதவித்தொகை நிறுத்தம்: மீண்டும் வழங்க முதியவர் மனு
/
இறந்ததாக கூறி உதவித்தொகை நிறுத்தம்: மீண்டும் வழங்க முதியவர் மனு
இறந்ததாக கூறி உதவித்தொகை நிறுத்தம்: மீண்டும் வழங்க முதியவர் மனு
இறந்ததாக கூறி உதவித்தொகை நிறுத்தம்: மீண்டும் வழங்க முதியவர் மனு
ADDED : ஜன 28, 2025 06:11 AM
தேனி: இறந்ததாக கூறி நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெரியகுளம் லட்சுமிபுரம் பெருமாள்சாமி மனு அளித்தார்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் பெரியகுளம் தாலுகா லட்சுமிபுரத்தை சேர்ந்த பெருமாள்சாமி, அவரது மனைவி கெங்கம்மாள் மனு அளிக்க வந்தனர். கெங்கம்மாள் கூறுகையில், 'எங்களுக்கு ஒரு மகன் இருந்தார்.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்னாள் இறந்து விட்டார்.
கணவருக்கு மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. அதனை மூன்று மாதமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுபற்றி தாலுகா அலுவலகத்திற்கு சென்று கேட்ட போது 'கணவர் இறந்து விட்டதாக கணினியில் பதிவேற்றம்' ஆகி உள்ளது. இதனால், உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
உயிருடன் உள்ள நிலையில் உதவித்தொகையை நிறுத்தி உள்ளனர். மீண்டும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார்.
பழனிசெட்டிபட்டி ராஜசேகர், பொம்மையகவுண்டன்பட்டி பரமசிவம் வழங்கிய மனுவில், அல்லிநகரம் கிராமத்தில் வாழையாத்துப்பட்டி வாய்கால் பாசனம் மூலம் 50க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்கிறோம்.
வாய்காலை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தண்ணீர் வருவதில் சிரமம் உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என இருந்தது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 17 பேருக்கு ரூ. 2.70 லட்சம் மதிப்பலான மூன்று சக்கர சைக்கிள், அலைபேசி வழங்கப்பட்டது.