ADDED : மார் 21, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஓய்வூதியர்கள் பங்கேற்று 30 மனுக்கள் வழங்கினர். இதில் 14 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட கருவூல அலுவலர் அருணாசலம், கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலிஜின்னா, கருவூல கணக்குத்துறை இயக்குநரக அதிகாரி அருள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.