ADDED : டிச 29, 2024 05:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தின கூட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார்.
மாநில தலைவர் பாலசுப்பிரமணியன்,நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ஆறுமுகம், பிற சங்க நிர்வாகிகள் உடையாளி, சென்னமராஜ், அன்பழகன், முகமது ஆசிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.