ADDED : நவ 13, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி ஒன்றிய அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், 'குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி' ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் நிலவழகன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர்கள் வெங்கட்ராமன், முருகன், ஜெயபாண்டி, மாவட்ட நிதி காப்பாளர் ஜானகி, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், அனைத்து துறை சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.