/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 18, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி,: தேனி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், 70 வயது முடிந்த ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில மண்டலச் செயலாளர் இம்மானுவேல் முன்னிலை வகித்தார். அரசு அலுவலர்கள் ஒன்றிய தேனி மாவட்டத் தலைவர் குபேந்திரசெல்வம், மாவட்ட இணைச் செயலாளர் திருஞானம் பேசினர்.மாநில அமைப்புச் செயலாளர் பாவானந்தன் நன்றி கூறினார்.