ADDED : அக் 25, 2025 04:53 AM

தேனி: தேனி மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், 70 வயது நிரம்பிய ஒய்வூதியதாரர்களுக்கு 10 சதவீத கூடுதல்ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
அங்கன்வாடி, சத்து ணவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.7850 வழங்கப்பட வேண்டும். மூத்த குடிமக்களுக்குகட்டணமில்லா பஸ் வசதி அமல்படுத்திட வேண்டும், என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
மண்டலச் செயலாளர் மானுவேல், மாநில மகளிரணி அமைப்பாளர் ரெங்கநாயகி, மாவட்டப் பிரசார செயலாளர் குணசேகரன், மத்திய செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட அமைப்புச்செயலாளர் பவானந்தன், மாவட்ட துணை தலைவர்கள் மாமுடிராஜ், திருமேனிபாலகுரு, ஜெயச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் இந்திராமேரி உள்ளிட்டஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் காளிமுத்துநன்றி தெரிவித்தார்.

