UPDATED : ஆக 08, 2026 06:14 PM
ADDED : ஆக 08, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர்,' பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.7850 ஆக நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி, நிர்வாகிகள் சிவமணி, ராஜேந்திரன், சவுகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
