/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்
/
மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்
மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்
மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் அதிகாரிகள் அலட்சியம் தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்
ADDED : மார் 11, 2024 07:05 AM

தேனி: பழனிசெட்டிபட்டியில் தெருவில் நடுவில் உள்ள மின்கம்பத்தில் மோதி தொடர் விபத்துக்கள் நடப்பதால் பொது மக்கள் பயத்துடன் அப்பகுதியில் நடமாடுகின்றனர். மேலும் அதனை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 11வது வார்டில் லால்பகதுார் சாஸ்திரி தெரு சுப்பிரமணியசிவா தெரு உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் சுப்பிரமணிய சிவா தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த தெருவில் உள்ள மின் கம்பம் ஒன்று இரும்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பம் ரோட்டின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் வாகனங்களில் சென்று வருவோர், வாகனங்கள் வரும்போது நடந்து செல்வோர் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதனை மாற்ற கோரி பேரூராட்சி நிர்வாகம், மின்வாரியத்திடம் பல முறை முறையிட்டும் பலன் இல்லை என, இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது ஒரு புறம் இருக்கு சாக்கடை துார்வாரும் பணிகள் உள்ளிட்டவை பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து சேதமடையும் குழாய் சந்திரா, இல்லத்தரசி, சுப்பிரமணிய சிவா தெரு:
நடு ரோட்டில் மின்கம்பம் அமைந்துள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் உள்ளது. சில நேரங்களில் வாகனங்கள் வீட்டு சுவர், பைப் லைன்களில் மோதி விடுகின்றன. இதனால் வீட்டில் பொருத்தி உள்ள வாகனங்கள் மோதி அடிக்கடி உடைவது தொடர்கிறது. மேலும் கார், லாரி, ஆட்டோ போன்றவை அதிகளவில் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் வீட்டு வாசலில் நின்று அவை எங்கேயும் சேதம் ஏற்படுத்தாமல் செல்வதை கவனிப்பது அன்றாட பணியாக மாறிவிட்டது. சில இடங்களில் மின் ஒயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் திடீர் விபத்து அபாயமும் உள்ளது. மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றார்.
நோய் பாதிப்பு
கார்த்திகேயன், சுப்பிரமணிய சிவா தெரு: இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அவை சில நேரங்களில் ரோட்டில் செல்வோரை துரத்துவதால் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
சாக்கடைகள் துார்வாராததால் பல இடங்களில் மண் நிறைந்துள்ளது. இதனால் கழிவு நீர் செல்ல வழியின்றி உள்ளது. தேங்கும் கழிவு நீரில் கொசு உற்பத்தி அதிகரித்து பொது மக்கள் கொசுக்கடியால் பாதிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., என்றனர்.

