sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கழிவுநீர் தேங்கிய குளத்தில் பாம்புகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

/

கழிவுநீர் தேங்கிய குளத்தில் பாம்புகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

கழிவுநீர் தேங்கிய குளத்தில் பாம்புகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்

கழிவுநீர் தேங்கிய குளத்தில் பாம்புகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி சிரமம்


ADDED : நவ 05, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 05, 2024 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் கன்னியப்பபிள்ளைபட்டி, மாயாண்டிபட்டி, குப்பாம்பட்டி கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் உள்ளது. கூடுதல் தேவைக்கு போர்வெலில் கிடைக்கும் நீரை பயன்படுத்துகின்றனர்.

குடிநீர் தேவை ஓரளவு பூர்த்தியானாலும் சுகாதார பிரச்னையை தீர்க்க முடியாமல் தவிக்கிறது. எரியாத தெரு விளக்குகளால் ஊரே இருளில் மூழ்கிறது. சுத்தம் செய்யப்படாத வடிகால், பல இடங்களில் குவிந்திருக்கும் குப்பை, நாளுக்கு நாள் பெருகும் கசாப்பு கடைகள், கோழி இறைச்சி கடைகளால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.

ஊராட்சியில் நிலவும் பிரச்னை குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

மழைநீர் குளத்தில் கழிவுநீர் சங்கமம்


ராமசாமி, கன்னியப்பபிள்ளைபட்டி: ஊராட்சி அலுவலகம் அருகே மழைநீர் தேங்குவதற்காக அமைக்கப்பட்ட குளத்தில் குப்பை குவிந்து, ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளது.

இதில் கழிவுநீர், மழை நீருடன் பாம்புகள் வசிக்கும் இடமாக மாறிவிட்டது. மழை நீர் கடந்து செல்ல முடியாமல் ஊராட்சி அலுவலக வளாகத்தில் தேங்குகிறது. சமுதாயக்கூடம் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளதால் மழைக்காலத்தில் நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை.

சமுதாயக் கூட்டத்தை பராமரித்து அப்பகுதியில் மழை நீர், கழிவுநீர் தேங்காமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை ஒட்டியுள்ள பாலத்தில் அடைப்பை சரி செய்து அப்பகுதி ஓடை வழியாக மழை நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.

இருளில் முழ்கிய கிராமம்


முருகன், கன்னியப்பபிள்ளைபட்டி: ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப சுகாதார வளாகம் இல்லை. இருக்கும் ஒரே பெண்கள் கழிப்பறையும் பராமரிப்பின்றி சுகாதார சீர்கேட்டில் உள்ளது.

கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யப்படுவதில்லை. ஊராட்சியில் குவியும் குப்பையை கொண்டு செல்ல டிராக்டர் வசதி உள்ளது. ஆனால் குப்பையை அகற்றி கிடங்கில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

தெரு விளக்குகள் பராமரிப்பு இன்றி பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது. ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மழை நீர் தேங்காாமல் அப்பகுதியில் வடிகால் அமைக்கும் நடவடிக்கை தேவை. இறைச்சி கடைகளால் வெளியேறும் கழிவு களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.

கூட்டு குடிநீர் கிடைப்பது இல்லை


எம்.அழகேசன், குப்பாம்பட்டி: ஊராட்சியால் குப்பாம்பட்டி கிராமம் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்படுகிறது. பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

வீடுகளில் இருந்த குடிநீர் இணைப்புகளை துண்டித்து பொது குழாயில் மட்டுமே குடிநீர் பிடிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.

கிராமத்தில் துப்புரவு பணிக்கு யாரும் வருவதில்லை. ஊராட்சியில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மாயாண்டிபட்டி கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிதி பற்றாக்குறையால் வசதி செய்வதில்சிரமம்


ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சியில் துப்புரவு பணிக்கு போதுமான பணியாளர்கள் இல்லை. இருக்கும் ஆட்களை கொண்டு அனைத்து இடங்களிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது.

15வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான புதிய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

விரைவில் பயன்பாட்டிற்கு கிடைத்து விடும். ஊராட்சியில் நிதி பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us