/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
4 மணி நேரம் நடந்த மறியல் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
/
4 மணி நேரம் நடந்த மறியல் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
4 மணி நேரம் நடந்த மறியல் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
4 மணி நேரம் நடந்த மறியல் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 12, 2025 06:50 AM
கம்பம் : க.புதுப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 4 மணி நேரம் தொடர்ந்து நடந்த ரோடு மறியலில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். போலீஸ், வருவாய்த்துறை மீது மக்கள் அருப்தியடைந்தனர்.
ஆங்கூர்பாளையம் தோட்டத்தில் டிராக்டரில் உழவு செய்து கொண்டிருந்த புதுப்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சந்தோஷ்குமார் 27, பலியானர். உடலை போலீசார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இறந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம், ' உடலை ஏன் தேனி மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றீர்கள் எனக் கேட்டும், கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு வரகூறி,' கம்பம் மற்றும் க.புதுப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கம்பத்தில் சிறிது நேரம் மட்டுமே மறியல் நடந்தது.
ஆனால் க.புதுப்பட்டியில் இரவு 7:00 மணிக்கு துவங்கி இரவு 11:30 மணி வரை மறியல் நீடித்தது. இதனால் கம்பம் - தேனி ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஞாயிறு என்பதால் விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், மருத்துவ மனைக்கு செல்வோர், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
சாலை மறியல் செய்தவர்களுடன் சமாதானப் பேச்சு வார்த்தையோ அல்லது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் வேடிக்கை பார்த்ததால், பொதுமக்கள் நீண்ட நேரம் அவதிப்பட்டனர்.
வேறு வழியின்றி இறந்தவர் உடலை தேனி மருத்துவக் கல்லூரியில் இருந்து போலீசார் இரவு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த பின்பே போராட்டம் கைவிடப்பட்டது.
தேனி ஏ.டி.எஸ்.பி. ஷெரால்டு அலெக்சாண்டர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டினத் தனர்.
சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கை பொதுமக்கள் அதிருப்தி ஏற்படுத்தியது.