/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை வசதி இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்
/
அடிப்படை வசதி இல்லாத மயானத்தால் மக்கள் சிரமம்
ADDED : செப் 20, 2025 04:33 AM
போடி: போடி அருகே சிலமலை மயானத்தில் தண்ணீர், மின் வசதி, நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிலமலையில் 1500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். சிலமலை வடக்குப் பகுதியில் உள்ள பொது மயான ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு தண்ணீர்இல்லாததால் நீண்ட துாரம் உள்ள தோட்டங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அங்கு கிணறுகளில் உள்ள நீரை சுமந்து வந்து இறந்தவர்களின் இறுதி காரியங்களை செய்கின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் மையம் இல்லாததால் திறந்த வெளியில் எரியூட்டி வருகின்றனர். வெயில், மழைக் காலங்களில் பொது மக்கள் நிற்பதற்கு கூட நிழற்கூரை இல்லை.
ரோடு, தண்ணீர், மின்வசதி, நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து நடவடிக்கை இல்லை. இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம், தகனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.