ஊரக பகுதியில் ரேஷன் அரிசிவாங்குவதை தவிர்க்கும் மக்கள்
ஊரக பகுதியில் ரேஷன் அரிசிவாங்குவதை தவிர்க்கும் மக்கள்
UPDATED : நவ 20, 2026 06:40 PM
ADDED : நவ 20, 2026 06:36 PM
தேனி: கிராம பகுதி ரேஷன் கடைகளில் பெரிய சைஸ் அரிசியை வாங்காமல் பொதுமக்கள் அதனை வாங்காமல் தவிர்த்து வருவதாக விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் 578 ரேஷன்கடைகள் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் 4.39 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசு வழங்கும் அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷனில் வினியோகிக்கப்படும் அரிசி அளவில் பெரிதாகவும், சமைக்க கூடுதல் நேரம் ஆகிறது என கூறி ரேஷன் அரிசி வாங்குவதை சமீபமாக ஊரக பகுதி மக்கள் பெரும்பாலானோர் தவிர்ப்பதாக விற்பனையாளர்கள் புலம்புகின்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், ‘இதுபற்றி நுகர்பொருள் வாணிப கழகத்தினரிடம் கேட்ட போது, எங்களுக்கு அனுப்புகிற அரிசியை கடைகளுக்கு அனுப்புகிறோம். தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சன்னரக அரசி வரத்து இல்லை. தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட பொது ரக அரிசி மட்டும் வருகிறது. அவை தான் இவை என கூறுகிறார்கள்,’ என்றனர்.
