/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு

ADDED : அக் 12, 2024 05:18 AM

ஆண்டிபட்டி: ஆயுத பூஜைக்காக பொருட்கள் வாங்க நகர் மற்றும் கிராமப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஆண்டிபட்டியில் குவிந்தனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஆண்டிபட்டியை கடந்து செல்ல முடியாமல் தவித்தன.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிபட்டி உள்ளது. தாலுகா அலுவலகம் முதல் கொண்டமநாயக்கன்பட்டி வரை உள்ள ஒன்றரை கி.மீ., தூரத்தில் நகர் பகுதி அமைந்துள்ளது. ஆண்டிபட்டி - வத்தலகுண்டு ரோடு, ஆண்டிபட்டி - பெரியகுளம் ரோடு, ஆண்டிபட்டி - வேலப்பர் கோயில் ரோடுகள் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. கிராமங்களில் இருந்தும் ஆண்டிபட்டி பகுதியில் இருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்க நேற்று ஆண்டிபட்டியில் குவிந்தனர். ரோட்டின் ஓரங்களில் நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு வசதி இல்லை. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனி, போடி, கம்பம் மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள், இதேபோல் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் தொடர்ச்சியாக இருந்தன. இதனால் ஆண்டிபட்டியில் நேற்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் இல்லாததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். பைபாஸ் ரோடு அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. மத்திய, மாநில அரசுகள் ஆண்டிபட்டியில் பைபாஸ் ரோடு அமைவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.