/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழாய் பதிக்க தோண்டியதால் சேதமடைந்த தெருக்களால் சிரமம் சின்னமனுார் நகராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு
/
குழாய் பதிக்க தோண்டியதால் சேதமடைந்த தெருக்களால் சிரமம் சின்னமனுார் நகராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு
குழாய் பதிக்க தோண்டியதால் சேதமடைந்த தெருக்களால் சிரமம் சின்னமனுார் நகராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு
குழாய் பதிக்க தோண்டியதால் சேதமடைந்த தெருக்களால் சிரமம் சின்னமனுார் நகராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் தவிப்பு
ADDED : டிச 08, 2024 05:50 AM

சின்னமனுார் : சின்னமனுார் நகராட்சியில் தெருக்கள் குண்டும், குழியுமாக மாறியும், திறந்த வெளி கழிப்பிடங்கள், பராமரிக்காத சாக்கடை என போதிய அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 50 ஆயிரத்திற்கும் அதிகம் உள்ளது. நகரில் விரிவாக்க பகுதிகளாக லட்சுமி நகர், எழில் நகர், அண்ணாமலை நகர், சிவசக்தி நகர், மின் நகர், திருநகர், விநாயக நகர், கோகுலம் நார், லட்சுமிநகர், கண்ணம்மாள் கார்டன் என புதிது புதிதாக காலனிகள் விரிவாக்க பகுதிகளாக உருவாகி வருகிறது. குடிநீர் வினியோகம் பரவாயில்லை என்றாலும் ரூ.28 கோடியில் நடந்த அம்ரூத் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பகிர்மான குழாய் பதிப்பதாக கூறி நகரின் அனைத்து தெருக்களையும் தோண்டி மேடு பள்ளமாக உள்ளது. இதனால் பல தெருக்கள், வீதிகளில் நடக்க முடியாத நிலை உள்ளது. தெருக்களை சீரமைக்க அரசு அனுமதித்த ரூ.13 கோடியில் பெரிய தெருக்களை சீரமைத்துள்ளனர். தண்ணீர் தொட்டி தெரு, வ.உ.சி. நகர் குறுக்கு வீதிகள், காந்திநகர் காலனி, நடுத்தெரு, வடக்கு ரதவீதி , பழைய பாளையம் ரோடு உள்ளிட்ட பல வீதிகள் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. பணி முடிந்த தெருக்களில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நகரில் பொது சுகாதாரம் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயலிழந்துள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கில் மலைபோல் குப்பை தேங்கியுள்ளது. அமைக்கப்பட்ட நுண் உரக்கூடங்கள் கண்துடைப்பாக செயல்படுகின்றன. சில உரக்கூடங்கள் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இந்நகராட்சி முதல் வார்டு கீழப்பூலாநத்புரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். வீதிகள் பராமரிக்காததால் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வார்டில் கழிவுநீர் செல்ல வசதி செய்யாததால் சாக்கடை தேங்கியுள்ளது. சேகரமாகும் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர்.
கால்வாயில் குப்பை
பொன்னகர் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் புதர் மண்டி பயனற்ற நிலையில் உள்ளது. அந்த சுகாதார வளாகத்திற்கு பின்பக்கம் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தும் அவலம் உள்ளது. சொசைட்டி வீதிகளில் குப்பைகள் அகற்றாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர்., கால்வாயை கடந்த செல்ல பாலம் இல்லாத நிலை உள்ளது. இப் பகுதியினர் கால்வாயை குப்பை கிடங்காக பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறையை ஆதிகாரிகள் ஆசியுடன் கடையாக மாற்றி விட்டனர்.
அறைகுறையான திட்ட பணிகள்
நகரில் கட்டப்படும் வாரச்சந்தை, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அறிவுசார் நூலகம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் அரைகுறையாக உள்ளது. ரூ.69.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட கண்ணம்மா கார்டன் பூங்காவில் செடி கொடிகள் வளர்ந்து புதராக மாறி உள்ளதால் குழந்தைகள் விளையாட செல்ல தயங்குகின்றனர். பூங்காவில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன் இன்றி உள்ளது.
குப்பை சேகரிப்பு பணி மோசம்
ஆறுமுகம், சின்னமனூர் : நகரில் குழாய் பதிப்பதாக கூறி வீதிகளை குண்டும், குழியுமாக மாற்றி விட்டனர். தண்ணீர் தொட்டி தெருவில் பாதி ரோடுஇல்லை. குப்பை வாங்க பணியாளர்கள் வருவது இல்லை. குடிநீர் விநியோகம் பரவாயில்லை. அம்ரூத் திட்டத்தில் இன்னமும் சப்ளை செய்யவில்லை. வீதிகளை பராமரிக்க ரூ.13 கோடி ஒதுக்கியதாக கூறினார்கள். எங்கள் தெருவை கண்டு கொள்ளவில்லை.
ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்
சிவாஜி, சமூக ஆர்வலர், சின்னமனூர் : வடக்கு, மேற்கு ரதவீதிகள், பல குறுக்கு தெருக்கள் மிக மோசமாக உள்ளது. இவற்றை பராமரிக்க வேண்டும். மெயின் ரோட்டில் மேற்கு , கிழக்கு பகுதி சாக்கடை துார் வார வேண்டும்: சீப்பாலக்கோட்டை ரோட்டில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி போக்குவரத்து நெரிசல் குறைக்க வேண்டும். ரூ.28 கோடியில் செயல்படுத்திய அம்ரூத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து தினமும் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். பி.டி.ஆர். கால்வாயில் இரு பக்கமும் சிமென்ட் சிலாப் பதிக்க வேண்டும்.