/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பால வசதி இன்றி சக்கம்மாபட்டி மக்கள் மழைக்காலத்தில் அவதி
/
பால வசதி இன்றி சக்கம்மாபட்டி மக்கள் மழைக்காலத்தில் அவதி
பால வசதி இன்றி சக்கம்மாபட்டி மக்கள் மழைக்காலத்தில் அவதி
பால வசதி இன்றி சக்கம்மாபட்டி மக்கள் மழைக்காலத்தில் அவதி
ADDED : ஜன 30, 2024 06:51 AM

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், சக்கமாபட்டியில் நாகலாறு ஓடையின் குறுக்கே பாலம் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் நாகலாறு ஓடை வழியாக தெப்பம்பட்டி, சுந்தர்ராஜபுரம், சக்கமாபட்டி வழியாக சென்று கண்மாய்களில் தேங்குகிறது.
மழைக்காலத்தில் இந்த ஓடையில் அதிக நீர் வரத்து இருக்கும். சக்கம்மாபட்டி ஓடையின் குறுக்கே மேம்பாலம் வசதி இல்லை. தரைப்பாலத்தில் அதிக நீர் சென்றால் பொதுமக்கள் அதனை கடந்து செல்ல முடியாது.
ஆண்டிபட்டியில் இருந்து கதிர்நரசிங்கபுரம், வீரசின்னம்மாள்புரம், சிவலிங்க நாயக்கன்பட்டி, சக்கமாபட்டி, பழையகோட்டை, டி.அழகாபுரி, ராமகிருஷ்ணாபுரம் வழியாக பாலக்கோம்பை செல்ல ரோடு, பஸ் வசதி உள்ளது.
சக்கமாபட்டி ஓடையில் அதிக மழை நீர் செல்லும்போது வாகனங்கள் கடந்து செல்ல முடியாததால் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மழை நீர் குறையும் வரை காத்திருக்க வேண்டி யுள்ளது.
அல்லது கதிர்நரசிங்கபுரத்திலிருந்து ராஜதானி, சேவாநிலையம், தெப்பம்பட்டி வழியாக பாலக்கோம்பை செல்ல வேண்டும். பல கி.மீ., தூரம் சுற்றி செல்வதால் பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது.
சக்கம்மாபட்டியில் பாலம் அமைக்க இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை இல்லை.