/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தொடர் சாரல் மழையால் வீட்டில் முடங்கிய மக்கள்
/
தொடர் சாரல் மழையால் வீட்டில் முடங்கிய மக்கள்
ADDED : அக் 22, 2025 01:05 AM

தேனி: மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை தொடர்ந்ததால் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர். ரோடுகளில் இயல்பை விட போக்குவரத்து குறைந்து காணப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் காலை முதல் சாரல் மழை பெய்தவாறு இருந்தது. அரசு விடுமுறை என்பதால் பலரும் வீடுகளிலேயே முடங்கினர்.
ரோட்டில் டூவீலர்களில் சென்றவர்கள் குடைபிடித்தவாறும், மழையில் நனைந்தவாறும் பயணித்தனர். போக்குவரத்து வழக்கத்தை விட குறைந்து காணப் பட்டது.
தேனி நகர்பகுதியில் பல கடைகள் நேற்று செல்படதாதால் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பல தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

