ADDED : அக் 22, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பயிர்கள் பாதித்துள்ளன. கடந்த வாரம் கொத்தமல்லிதழை கிலோ ரூ. 25 முதல் ரூ. 30 வரை விற்பனையாகி வந்தது. ஆனால், கடந்த இரு தினங்களாக மொத்த விலையில் ரூ. 60 வரை விற்பனையானது. சில்லரையில் ரூ.10க்கு 100கிராம் அதற்கும் குறைவாக வழங்கினர். மழையால் கொத்தமல்லி சாகுபடி தோட்டங்கள் நீரில் முழ்கி அழுகியது. இதனால் சாகுபடி பாதிப்பால் விலை உயர்ந்தது.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ''மாவட்டத்தில் தேவாரம், கடமலை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் மல்லி சாகுபடி செய்யப்படுகிறது. தொடர்மழை காரணமாக வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது,'.