ADDED : அக் 22, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தென்கரை, வடகரை 30 வார்டுகளில் தென்கரை பஜார்வீதி, சுதந்திர வீதி, தெற்கு தெரு, மூன்றாந்தல், வடகரை வி.ஆர்.பி., நாயுடு தெரு, அரண்மனை தெரு என பெரியது, சிறியது என 145 தெருக்கள் உள்ளது.
நகராட்சி தூய்மைப் பணியை தனியார் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
தீபாவளியை முன்னிட்டு ஜவுளிக்கடைகள், தற்காலிக கடைகள் உட்பட பல்வேறு கடைகள், பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.
கடைகளில் கொட்டப்பட்ட குப்பை, வீடுகளின் குப்பை, தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததில் தெருக்களில் சேர்ந்த குப்பையை அகற்றும் பணியில் 50க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 19 டன் குப்பை அகற்றப் பட்டது. இவற்றில் 3 டன் மழையில் ஈரமான பட்டாசு கழிவு குப்பை.