/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புத்தக திருவிழாவிற்கு மக்கள் குடும்பத்துடன் வருகை
/
புத்தக திருவிழாவிற்கு மக்கள் குடும்பத்துடன் வருகை
புத்தக திருவிழாவிற்கு மக்கள் குடும்பத்துடன் வருகை
புத்தக திருவிழாவிற்கு மக்கள் குடும்பத்துடன் வருகை
ADDED : டிச 25, 2025 05:49 AM
தேனி: தேனியில் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து புத்தகங்களை வாங்கி சென்றனர்.
தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா டிச., 21ல் துவங்கியது.
தினமும் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள், மாலையில் உள்ளூர் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் இலக்கிய மன்றம், இரவில் பிரபல பேச்சாளர்கள், இலக்கியவாதிகள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் நடக்கிறது. மாலையில் பணிமுடிந்து திரும்பும் பெற்றோர்கள், குழந்தைகளுடன் சிந்தனை அரங்கம், கலை நிகழ்ச்சிகள் பார்க்க குடும்பத்துடன் வருகின்றனர். அங்கு அரங்குகளில் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை தேடி வாங்கி செல்கின்றனர்.